மேலும், கடந்த 14 நாட்களுக்குள் இந்தியாவுக்கு பயணம் செய்த அனைத்து பயணிகளும் செரோலஜி பரிசோதனை செய்ய வேண்டும் என சிங்கப்பூர் நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துஉள்ளது.
இந்தியாவில் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் கொரோனா சோதனை செய்து, நெகடிவ் என ரிசல்ட் வந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சிங்கப்பூருக்குள் நுழையும் இந்தியர்கள், சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற அல்லது இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சோதனை ஆய்வகங்களிலிருந்து கொரோனா சோதனை செய்து வந்திருக்க வேண்டும் என்றும், சிங்கப்பூர் வந்தவுடன் அவர்களுக்கு ஆன்டிபாடி (செரோலாஜி) சோதனை நடத்தப்படும் என்றும் சிங்கப்பூரின் சுகாதார அமைச்சகம் (எம்ஓஎச்) தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து பயணிகள் புறப்படும் 72 மணி நேரத்திற்குள் சோதனை செய்யப்பட்டிருக்க வேண்டும். தேவையான ஆவணங்கள் இல்லாதவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் எச்சரித்துள்ளது.