தென்னக அளவில் எல்லோராலும் தேடப்படும் இசையமைப்பாளராக இருக்கும் அனிருத் அவ்வப்போது பாடல்களை காப்பியடித்து சர்ச்சைகளில் சிக்குவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

ஆங்கில பாப் பாடல்களை காப்பியடித்து சர்ச்சையில் சிக்குவது அனிருத்திற்கு இது ஒன்றும் புதிதல்ல.

கத்தி படத்தில் விஜய்க்காக அனிருத் உருவாக்கிய அதிரடியான தீம் இசை ஆங்கிலத்தில் வெளிவந்த ஒரு பாடலின் தழுவல் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அஜித்தின் வேதாளம் படத்திற்காக அனிருத் உருவாக்கிய தீம் இசையும் ஒரு ஆங்கிலப் பாடலின் இசையை காப்பியடித்து உருவாக்கப்பட்டது தான், என்பதும் தெரியவந்தது.

காப்பி விவகாரதில் சிக்கி அனிருத்தின் ஒரு பாடலை யூ-டியூப் தளத்தில் இருந்தே நீக்கிய சம்பவமும் அரங்கேறியது. கோலமாவு கோகிலா படத்துக்காக அனிருத் இசையமைத்த ‘எனக்கு கல்யாண வயசுதான்’ பாடல் காப்புரிமை விவகாரதில் சிக்கி பின்னர் நீக்கப்பட்டது, இசையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

விக்ரம் படத்தில் பழைய விக்ரம் படத்துக்காக இளையராஜா போட்ட இசையையே கொஞ்சம் மாடர்ன் வடிவில் மாற்றி இசையமைத்து அதே வேகத்தில் மாட்டிக்கொண்டு முழித்தார்.

இந்த வரிசையில் தற்போது டாக்டர் படத்தின் சோ பேபி பாடலும் இணைந்திருப்பது நெட்டிசன்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.