சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்(ஐசிசி) தலைவராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Anil

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி கூட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் உலகக் கோப்பைக்கான தொடர் நெருங்குவதால் அதன் ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது புல்வாமா தாக்குதல் பிரச்சனை தொடர்பாக இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தீவிரவாதிகளில் தாக்குதலினால் இந்தியாவில் பதற்றம் நிலவுவதால் இந்திய அணி வீரர்களுக்கு கூடுதலாக பாதுகாப்பு வழங்கும்படி பிசிசிஐ கோரிக்கை விடுத்தது. அதன்படி, இந்திய வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என ஐசிசியின் தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட்சன் உறுதி அளித்துள்ளார்.

எனினும், தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் நாடுகளின் வீரர்கள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் வேண்டுகோளை ஐசிசி நிராகரித்துள்ளது. இதையடுத்து இந்த கூட்டத்தின் முடிவில், ஐசிசியின் தலைவராக அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே நீடிப்பார் என அறிவிக்கப்பட்டது.

இதற்கு முன்னதாக கடந்த 2012ம் ஆண்டு முதல் தற்போது வரை அனில் கும்ப்ளே தன் அதன் தலைவராக இருந்து வருகிறார். தற்போது அந்த பதவிக்கு 3வது முறையாக அனில் கும்ப்ளே மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.