புது டெல்லி:
சில நாட்களுக்கு முன்பு நொய்டா காவல்துறையினர் வெளியிட்டதாக தப்லிகி ஜமாஅத்தில் குறித்த தவறான செய்தியை போலி செய்தியை பதிவிட்ட செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ மீண்டும் ஒரு முறை தமிழக சுகாதார செயலாளரின் அறிக்கையை மேற்கோள் காட்டி தவறான செய்திகளைப் டுவிட்டரில் பதிவிட்டதுடன், அதற்காக மன்னிப்பு கோரியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சுகாதாரத்துறை அமைச்சர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், இன்று ஒரே நாளில் மட்டும் 106 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,075ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 10,655 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 39,041 வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். 162 பேர் அரசு கண்கானிப்பில் உள்ளனர். 58,189 பேருக்கு 28 நாட்கள் வீட்டு கண்காணிப்பு முடிந்துள்ளது. மொத்தமாக 50 பேர் குணமடைந்துள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் சுகாதாரத்துறை செயலாளர் தகவல் தெரிவித்திருந்தார்.
இந்த தகவலை குறித்து ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில், தமிழகத்தில் 106 கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், அவற்றில் 90 பேர் ஒருநபர் தொடர்பால் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1075 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்ததாக குறிப்பிட்டிருந்தது.
ஒருநபர் தொடர்பால் வைரஸ் குறித்து தமிழக சுகாதார துறை செயலாலர் எதுவும் தெரிவிக்காத நிலையில், இது ஏஎன்ஐ செய்தியில் தவறாக இடம் பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், இந்த டுவிட்டர் பதிவு பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. இதையடுத்து அந்த பதிவை உடனடியாக நீக்கிய ஏஎன்ஐ நிறுவனம், அதற்காக வருத்தம் தெரிவிப்பதாக குறிப்பிட்டு மற்றொரு பதிவை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளது.