ண்ணூர்

மும்பை நிழல் உலக தாதா தாவுத் இப்ராகிம் சகோதரர் அனிஸ் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி சயீத் கண்ணூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

                    தாவூத் இப்ராகிம்                                                                     அனீஸ் இப்ராகிம்

மும்பை நிழல் உலக தாதாவான தாவுத் இப்ராகிம் தனது சகோதரர் மற்றும்  நண்பர்களுடன் சேர்ந்து பல சட்டவிரோதமான குற்றங்கள் செய்து வந்தார்.   மும்பை தொடர் வெடிகுண்டு நிகழ்வு குறித்து இவரை காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க இருந்த போது இவர் பாகிஸ்தானுக்குத் தப்பி ஓடி விட்டார்.   இவருடைய  சகோதரர் அனீஸ் இப்ராகிம்  தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பல மும்பை செல்வந்தர்களை மிரட்டி பணம் பறித்து வந்தார்.

இவர்கள் நவி மும்பை பகுதியைச் சேர்ந்த ஒரு ஓட்டல் அதிபரைக் கடத்தி பணம் பறிக்க முயன்றதாக வழக்குப் பதியப்பட்டுள்ளது.  இது தொடர்பாக நான்கு பேரை மும்பை காவல்துறை இந்த வருட தொடக்கத்தில் கைது செய்தது.   இந்த நால்வரிடம் விசாரணை செய்த்தைல் சயீத் என்பவர் தாவுத் இப்ராகிமின் ஹவாலா விவகாரங்களைக் கவனித்து வந்ததாகவும்  அனீச் இப்ராகிமுக்கு இவர் நெருங்கிய கூட்டாளி என்பதும் தெரிய வந்தது.

இந்த வழக்கு தொடர்பாக சயீத்  தேடப்பட்டு வரும் குற்றவாளியாக காவல்துறையால் அறிவிக்கப்பட்டார்.   அப்போது சயீத் துபாயில் இருந்தார்.  அவர் மீது லுக் அவுட் சர்க்குலர் பிறப்பிக்கப்பட்டது.   கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் விமான நிலையத்துக்கு சயீத் வர உள்ளதாகக் கிடைத்த தகவலையொட்டி மும்பை காவல்துறையினர் அவரை விமான நிலையத்தில் காத்திருந்து பிடித்து கைது செய்துள்ளனர்.

நேற்று சயீத் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  அவருக்கு ஆகஸ்ட் 16 வரை காவல்துறை காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதித்துள்ளது.   இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர், “அனீஸ் இப்ராகிம் குழுவில் முக்கியமானவர் சயீத்  ஆவார்.. இவரிடம் இரு பாஸ்போர்ட்டுகள் உள்ளன.  இவர் அடிக்கடி இந்தியாவுக்கு வந்து சென்றுள்ளார்.  இவரிடம் விசாரணை செய்வதன் மூலம் இந்த குழுவின் மற்ற உறுப்பினர்கள் பற்றி அறிய முடியும்” எனக் கூறி உள்ளார்.