நடிகை ஆன்ட்ரியா தற்போது வெற்றிமாறன் தயாரிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார். இந்தப் படத்தை புதுமுக இயக்குநர் ஆனந்த் இயக்குகிறார்.
மேலும் இந்தப் படத்தில் நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ‘வடசென்னை’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவர் ஆண்ட்ரியா. ‘வடசென்னை’ படத்தின்போது வெற்றிமாறன் – ஆண்ட்ரியா இடையே ஏற்பட்ட நட்பால் இப்படத்தைத் தயாரித்துக் கொடுக்க வெற்றிமாறன் ஒப்புக்கொண்டுள்ளார். ஏப்ரலில் படப்பிடிப்புக்குச் செல்ல படக்குழு ஆயத்தமானது. தற்போது கரோனா அச்சத்தால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.