மராவதி

ரும் நவம்பர் 2 முதல் ஆந்திர மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்

நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன.  தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அது தற்போது வரை தொடர்ந்து வருகிறது.   அக்டோபர் 15க்கு மேல் பள்ளிகளைத் திறக்க அனுமதி அளித்துள்ளது இதற்கான நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.   இதையொட்டி பல மாநிலங்கள் பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை நடத்துகின்றன.

ஆந்திர மாநிலத்தில் வரும் நவம்பர் 2 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.  நேற்று அமராவதி நகரில் காணொளி மூலம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இதைத் தெரிவித்த அவர் 1,3,5, மற்றும் 7 ஆம் வகுப்புக்களுக்கு ஒரு நாளும், 2,6,6, மற்றும் 8 ஆம் வகுப்புக்கு அடுத்த நாளும் வகுப்புக்கள் நடக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ”750 க்கும் மேல் மாணவர்கள் உள்ள பள்ளிகளில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வகுப்புகள் நடத்த வேண்டும்.  காலை வேளைகளில் மட்டுமே வகுப்புக்கள் செயல்பட வேண்டும்.  மாணவர்களுக்குப் பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்டு வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.  இது நவம்பர் வரை தொடரும்

டிசம்பர் மாத வகுப்புக்கள் குறித்து அப்போதைய நிலைமையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்.  பள்ளிக்கு வர விரும்பாத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புக்கள் நடத்தப்படும்.  அந்த வகுப்புக்களும் ஆன்லைன் மூலம் ஒரு நாள்  விட்டு ஒரு நாள் நடக்கும்” என ஜெகன்மோகன் ரெட்டி கூறி உள்ளார்.

ஏற்கனவே 9 மற்றும்  10 வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புக்கள் நடைபெற்று வருவது தெரிந்ததே.