
விஜயவாடா:
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து, ஆந்திராவின் விஜயவாடாவுக்கு தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
விஜயவாடா அருகே ஆற்றின்மீது உள்ள பாலத்தில் பஸ் வந்தபோது, திடீரென பஸ் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்தது.
இந்த கோர சம்பவத்தில் 8 பேர் அந்த இடத்திலேயே பலியானார்கள். மேலும் காயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் விஜயவாடா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.
இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. டிரைவரின் அலட்சியம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Patrikai.com official YouTube Channel