ஐதராபாத்
ஆந்திராவில் டிரைவர் குடிபோதையில் இருந்ததால் பஸ் கால்வாயில் கவிழ்ந்து 7 பேர் பலியானார்கள்.
இன்று அதிகாலை ஐதராபாத்திலிருந்து விசாகபட்டணம் வந்த வால்வோ பஸ் ஒன்று சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்பின் மீது பயங்கரமாக மோதியது. இதையடுத்து பஸ் கட்டுப்பாட்டை இழந்து இரண்டு பாலங்களுக்கிடையில் உள்ள கால்வாயில் விழுந்த
து. இதனால் பஸ்ஸின் முன்பகுதி நசுங்கி 7 பேர் உயிரிழந்தனர்.
காயமடைந்த 30க்கும் அதிகமான பயணிகள் சிகிச்சைக்காக விஜயவாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பஸ் டிரைவர் குடிபோதையில் ஓட்டியதால்தான் இந்த விபத்து நடந் த தாக கூறப்படுகிறது. இருப்பினும் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel