அமராவதி: ஆந்திராவில் 24 மணி நேரத்தில் மேலும் 5,487 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திராவில் சில நாட்களாகவே கொரோனா தொற்றுகள் அதிக எண்ணிக்கையில் பதிவாகி வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5,487 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதன் மூலம், ஒட்டு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,81,161 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில் கொரோனாவால் 37 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 5,745 ஆக உயர்ந்து உள்ளது.
ஒரேநாளில் 7,210 பேர் குணம் பெற ஒட்டு மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,12,300 ஆக இருக்கிறது. மாநிலத்தில் தற்போது வரை 63,116 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.