மராவதி

மிழக குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதியில் இருந்து 3.33 டிஎம்சி நீரை வழங்க ஆந்திர அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னைக்கு குடிநீர் வசதிக்காக மறைந்த முதல்வர்கள் எம் ஜி ஆர் மற்றும் என் டி ஆர் இணைந்து தெலுக்கு கங்கா திட்டம் உருவாக்கினர்.    அந்த ஒப்பந்தத்தின் படி தெலுங்கு கங்கா கால்வாயில் வரும் 5 டி எம் சி நீரில் சென்னை குடிநீர் தேவைக்காக 3.33 டி எம் சி நீரை ஆந்திரா திறந்து விட வேண்டும்.    அதை ஒட்டி தமிழ்நாடு நீர்வளத்துறை தலைமைப் பொரியாளர் ஒரு கடிதம் எழுதி இருந்தார்.

அதில் அவர், “சென்னை நகருக்கு 4 நீர்தேக்கங்களில் இருந்து குடிநீர் வழங்கப் பட்டு வருகிறது.   ஆனால் மழை குறைவாக பெய்ந்ததால் தற்போது 46% நீர் மட்டுமே அங்கு உள்ளது.   எனவே சென்னை நகர குடிநீர் தேவைக்காக கண்டலேறு நீர் த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் உடனடியாக திறந்து விடவேண்டும்”  என கேட்டுக் கொண்டிருந்தார்.

அதற்கு ஆந்திர நீவளத்துறை செயலாளர் ஒப்புக் கொண்டு என் டி ஆர் தெலுங்கு கங்கா திட்ட தலைமை பொறியாளருக்கு ஒரு உத்தரவு அனுப்பி உள்ளார்.  அந்த உத்தரவில்,”சென்னை குடிநீர் தேவைக்காக முன்பு செய்துக் கொண்ட ஒப்பந்தப்படி 3.33 டி எம் சி தண்ணீரை திறந்து விட அனுமதி அளிக்கப்படுகிறது”  எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.