அமராவதி:
ஆந்திர மாநிலத்துக்கு 4 தலைநகரங்களை உருவாக்கவும், அமராவதி திட்டத்தை கைவிட மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெடடி முடிவு செய்து இருப்பதாக ஆந்திர மாநில பாஜக எம்.பி. பீதி கிளப்பி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர முதல்வராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித்தலைவர் பதவி ஏற்றதை தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், ஆந்திர மாநிலத்திற்கு 4 தலைநகரங்களை உருவாக்க திட்டமிட்டு இருப்பதாக, கூட்டணி கட்சியைச் சேர்ந்த பாஜக எம்.பி. தெரிவித்து உள்ளார்.
ஏற்கனவே ஆட்சிக்கு ஜாதிவாரியாக 5 துணை முதல்வர்களை நியமித்துள்ள ஜெகன், தற்போது 4 தலைநகரங்கள் உருவாக்க இருப்பதாக கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திரமாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்ட நிலையில், முந்தைய மாநில தலைநகர் ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் இணைந்து விட்டதால், ஆந்திர மாநிலத்துக்கு புதிய தலைநகராக அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு அமராவதியை அறிவித்து, அதற்கான பணிகளை உலக வங்கி ஆதரவுடன் நிறைவேற்றி வந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், சந்திரபாபு நாயுடு கட்சி தோல்வி அடைந்த நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியை கைப்பற்றினார். தொடர்ந்து, அமராவதி திட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளதாக மாநில அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு 4 தலைநகரங்களை உருவாக்குவது தொடர்பாக மத்திய அரசிடம் ஜெகன்மோகன் ரெட்டி தரப்பில் பேசப்பட்டு உள்ளதாக, ஆந்திர மாநில பாஜக எம்பி, டி.ஜி.வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய டி.ஜி.வெங்கடேஷ் எம்.பி., ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன், தற்போதைய தலைநகர் அமராவதி திட்டத்தை கைவிட முயற்சிப்பதாகவும், அதற்கு பதில் புதிய 4 தலைநகரங்களை உருவாக்க திட்டமிட்டு உள்ளார். இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர்க ளுடன் ஜெகன் மோகன் ரெட்டி பேசியுள்ளார், இந்த தகவலை தான் ஒரு பாஜக நிர்வகியிடம் இருந்து அறிந்து கொண்டதாக தெரிவித்து உள்ளார்.
தற்போது நாட்டில் உள்ள நான்கு பருவ காலங்களைப் போல, மாநிலத்தில் நான்கு தலைநகரங் களை உருவாக்க ஜெகன் திட்டமிட்டு வருவதாகவும் இதன் காரணமாக அமராவதி திட்டம் கைவிடப்படலாம் என்றும் தெரிவித்து உள்ளார்.
ஏற்கனவே முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஒவ்வொரு பிராந்தியத்தையும் அபிவிருத்தி செய்வதற்காக ராயலசீமா, ஓங்கோல்-குண்டூர்-நெல்லூர், கிருஷ்ணா-கோதாவரி மற்றும் ஸ்ரீகாகுளம்-விசாக்-விஜயநகரம் போன்ற நகரங்களை மேற்பார்வையிட ஐந்து துணை முதல்வர்களை நியமித்து உள்ள நிலையில், தற்போது மாநில தலைநகரங்களை நியமிக்க முடிவு செய்துள்ளளதாக தெரிகிறது என்றும் வெங்கடேஷ் கூறினார்.
ஏற்கனவே, தேர்தலுக்கு முன்பு தனது பாதயாத்திரையின் போது, மூலதனத்தை பரவலாக்குவது குறித்து ஜெகன் இதேபோன்ற வாக்குறுதியை அளித்திருப்பதை சுட்டிக்காட்டியவர், ஆந்திர மாநில நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு (எம்ஏயுடி) அமைச்சர் போட்சா சத்தியநாராயணா வெளியிட்ட அறிக்கையிலிருந்து அமராவதியை ‘மாற்றுவதற்கான’ திட்டம் செய்திகளில் உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டினார். இனால் பீதி அடையத்தேவையில்லை என்றும் கூறினார்.
சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியில் உலக வங்கி நிதி உதவியுடன் அமராவதி ஒரு மாபெரும் நகராக வளர்ந்து வரும் நிலையில், ஜெகனின் முடிவு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநில முதல்வரின் இந்த நடவடிக்கை உள்ளூர்வாசிகளும் எதிர்க்கட்சித் தலைவர்களும் சந்தேகங்களை வெளிப்படுத்திய நிலையில் தற்போது சர்ச்சையை உருவாக்கி உள்ளது.