‘அந்தாதூன்’ படத்தின் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

தெலுங்கில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் நிதின், தபு கதாபாத்திரத்தில் தமன்னா, ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் நபா நடேஷ் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமானார்கள்.

மெர்லபாகா காந்தி இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படம் நிதின் நடிப்பில் உருவாகும் 30-வது படமாகும்.

தாகூர் மது வழங்க சுதாகர் ரெட்டி மற்றும் நிகிதா ரெட்டி இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள். இசையமைப்பாளராக மஹதி ஸ்வர சாகர் மற்றும் ஒளிப்பதிவாளராக ஹரி கே வேதாந்த் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.