சென்னை: சென்னையில் பழங்கால சிலைகளை விற்க முயன்ற நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 15 பழங்கால சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் பல கோவில்களில் சிலைகளை திருடிய சிலைகள் சிலை தடுப்பு காவல்துறையினரால் மீட்கப்பட்டு வருகிறது. அதுபோல சில கோவில்களில் உண்மையான சிலைகளுக்கு பதில்  போலிச் சிலைகளை நிறுவியுள்ளது  தெரிய வந்துள்ளது.. அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமான சிலைகள் வெளிநாடுகளின் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டு உள்ளது. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து திருடப்பட்ட பழங்கால பொருட்கள் மற்றும் சிலைகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தற்போது மீட்கப்பட்டு வருகிறது. மேலும் பழங்கால சிலைகளை விற்க முயன்றவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரி ஆரோவில் பகுதியல் உள்ள கடை மற்றும் பல இடங்களில் இருந்து பல சிலைகள் மீட்கப்பட்டன.

இந்த நிலையில், தற்போது, பழங்கால சிலைகளை சென்னையில் விற்க முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சென்னை திருவான்மியூர் அருகே பழங்கால சிலைகளை விற்க முயன்ற சுரேந்திரா என்ற தரகர் கைது செய்துள்ளனர். இவரிடம் இருந்து,  நடராஜன், அம்மன், புத்தர், விநாயகர் உள்ளிட்ட 15 சிலைகளை  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும்  விசாரணை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.