திண்டிவனம்

பாமக தலைவர் பதவியில்  இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கப்பட்டதை எதிர்த்து அவர் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர்,

தற்போது பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் செயல்பட்டு  வரும் நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், பா.ம.க.வின் தலைவராக இனி நானே செயல்படுவேன் என்றும், அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக நியமிக்கப்படுவதாகவும் அறிவித்தார்.

மேலும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், கூட்டணி உள்ளிட்ட விஷயங்களை கட்சியின் நிர்வாகிகளை அழைத்துப் பேசி முடிவெடுப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, விழுப்புரத்தில் நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழுவில் ராமதாஸ், அன்புமணி இடையே வார்த்தை போர் ஏற்பட்டது. தற்போது அன்புமணி ராமதாஸை தலைவர் பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக ராமதாஸ் அறிவித்துள்ளது பா.ம.க. தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அன்புமணி ராமதாஸை தலைவர் பதவியிலிருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டிவனத்தில் அன்புமணி ராமதாஸின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீண்டும் பா.ம.க. தலைவராக அன்புமணி ராமதாஸை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் முழக்கமிட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.