னையூர்

பாமக மாவட்ட செயலாளர்களுடன் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்.

The Union Minister for Health & Family Welfare, Dr. Anbumani Ramadoss briefing the media after his meeting with the Health Ministers of Polio affected states Delhi, UP, Bihar, Uttaranchal, Jharkhand, MP, Haryana and Maharashtra, in New Delhi on September 21, 2006.

கடந்த சில நாட்களுக்கு முன் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பட்டானூரில் நடந்த பாமகவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் காலியாக உள்ள இளைஞர் சங்க தலைவர் பதவிக்கு தனது மகள் வழி பேரனான பரசுராமன் முகுந்தன் என்பவரை அறிவித்தார்.

அதற்கு மேடையில் இருந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் டாக்டர் ராமதாஸ்,

“இது நான் ஆரம்பித்த கட்சி. நான் சொல்வதைத்தான் கேட்கணும். கேட்காவிட்டால் யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது. மாநில இளைஞர் சங்க தலைவராக முகுந்தன் நியமிக்கப்படுகிறார். அவர் தலைவருக்கு உதவியாக இருப்பார்”

என்றார்.

இனால் கோபத்துடன் அங்கிருந்து காரில் அன்புமணி ராமதாஸ் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். பாமக கூட்டத்தில் ஒரே மேடையில் டாக்டர் ராமதாசும், டாக்டர் அன்புமணி ராமதாசும் வார்த்தையால் மோதிக்கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வார்த்தையால் மோதி கொண்டதை தொடர்ந்து கடந்த 29-ம் தேதி திண்டிவனம் தைலாபுரத்தில் டாக்டர் ராமதாஸை அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார்.

தற்போது, சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் பாமக கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்.  தனக்கு அன்புமணியுடன் கருத்து வேறுபாடு இல்லை என ராமதாஸ் கூறிய நிலையில் இந்த ஆலோசனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.