சென்னை
தமிழ்க அமைச்சர் அன்பில் மகேஷ் தேசிய கல்விக் கொள்கை எனந்து சமஸ்கிருதத்துக்கு மணி கட்டி அனுப்புவது எனக் கூறி உள்ளார்.

நேற்று டெல்லியில் நடந்த ஒரு விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா
“காலனித்துவ ஆட்சிக்கு முன்பே சம்ஸ்கிருதத்தின் வீழ்ச்சி தொடங்கியது. பிரதமா் மோடியின் தலைமையிலான ஆட்சியில் சம்ஸ்கிருதத்தின் மறுமலா்ச்சிக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. சமஸ்கிருத மொழியை ஊக்குவிப்பது அதன் மறுமலா்ச்சிக்கானது மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கானது. .மோடி அரசின் தேசியக் கல்விக் கொள்கை சமஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது
என்று தெரிவித்தார்.
இதற்கு தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,
” நாங்களும் வர்ணாசிரமத்தை உயர்த்திப் பிடிக்கும் சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம் என்கிறோம் மோடி அரசின் தேசியக் கல்விக் கொள்கை சமஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது” என்று பேசியுள்ளார் மத்திய மந்திரி அமித்ஷா.
இதைத்தான் நாங்களும் தெரிவித்து வருகிறோம். “வர்ணாசிரமத்தை உயர்த்திப் பிடிக்கும் சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்” என்கிறோம். “இந்தியை முன்னால் அனுப்பி பின்னால் சமஸ்கிருதத்திற்கு மணி கட்டி அனுப்புவதுதான் தேசியக் கல்விக் கொள்கை” என்கிறோம். ”
என்று பதில் அளித்துள்ளார்.