சென்னை: தமிழ்நாட்டில், போலீசுக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது என திமுக அரசை கண்டித்து என்டிஏ நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சனம் செய்தார்.

திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் என்.டி. ஏ கூட்டணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை கே.கே நகரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அப்போது திமுக அரசை கடுமையாக சாடினார்.
தி.மு.க அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. செங்னனை கே.கே. நகரில், அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, தலைமையில் நிர்வாக திறனற்ற திமுக அரசை கண்டித்து அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுக ஆட்சியில் போதைப் பொருள் புழக்கம் அதிகரிப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்று தமிழகத்தின் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்திள்ளது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் போலீஸ்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டி உள்ளார்.
இந்த ஐந்து ஆண்டு காலத்தில் தமிழக மக்கள் பட்ட துன்பம் ஏராளம். ஒவ்வொரு நாளும் மக்கள் படுகின்ற துன்பம் பற்றி ஆட்சியாளர்கள் கவலை படாமல் உள்ளனர். இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழ்நாடு என்று ஸ்டாலின் சொல்வார். எதில் முதல் மாநிலம் கடன் பெறுவதில் முதல் மாநிலமாக உள்ளது. இந்த கடனை எல்லாம் நாம் தான் அடைக்க வேண்டிய சூழலில் தள்ளப்பட்டு இருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டும் காணாமல் விளம்பரப் படப்பிடிப்புகளில் ஈடுபட்டதாகவும், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான கொடூரமான பாலியல் கொடுமைகளும் கொலைகளும் அதிகரித்துள்ளதாகவும் கூறியவர், போதைப் பொருள் விற்பனை, கள்ளச்சாராய விற்பனை, மணல் கொள்ளை, இயற்கை வளக் கொள்ளை போன்றவற்றில் திமுக பிரமுகர்கள் ஈடுபடுவதாகவும், செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதும், ஏழை மக்களை ஏமாற்றி கிட்னி திருடிய வழக்கில் திமுக சட்டமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான மருத்துவமனை குற்றம் சாட்டப்பட்டதும், பாலியல் வன்கொடுமைகளில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் ஈடுபட்டதும் மக்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.‘
தற்போது, தமிழகத்தில் போலீசுக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. ஒரு வருடத்திற்கு 1408 கொலைகள் நடந்துள்ளது. 2026 இல் மொத்தமாக 110 கொலைகள் நடைபெற்றிருக்கிறது. பிப்ரவரியில் 84, மார்ச் மாதம் 52 என கடந்த 75 நாட்களில் மொத்த கொலை 246 கொலைகள் நடைபெற்றிருக்கிறது .
உடல் உறுப்புகள் திருடப்படுகின்றன. கிட்னி திருட்டு நடக்கிறது.. மாணவர்கள் கஞ்சாவுக்கு அடிமையாகின்றனர். கிட்னி திருட்டு விவகாரத்தில் அதிமுக ஆட்சியில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர், திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 30 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், இதில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 4 பட்டியலின இளைஞர்கள் லாக்கப்பில் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.