கௌசாம்பி
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 48 ஆண்டுகள் சிறையில் இருந்த நிரபராதி 104 வயதில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்

கடந்த 1977 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் உ த்தரப்பிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தைச் சேர்ந்த சரோஜ், குற்றம் சாட்டப்பட்டு கிட்டத்தட்ட 48 ஆண்டுகள் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டு, இறுதியாக 104 வயதில் விடுதலை ஆகியுள்ளார். இவரது 5 மகள்களும் தங்கள் தந்தை குற்றவாளி இல்லை என்பதை நிரூபிக்க பல கஷ்டங்களையும் தாங்கி கொண்டுள்ளனர்,.
ஆகஸ்ட் 16, 1977 அன்று நடந்தது. கிராமத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையே நீண்டகாலமாக இருந்த பகை வன்முறையாக மாறி மோதலில் முடிந்து மோதலில் பிரபு சரோஜ் என்பவர் உயிரிழந்து கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லக்கன் சரோஜ் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த வழக்கில் மூவருக்கும் ஜாமின் வழங்கப்பட்டது. ஆயினும்பிரயாக்ராஜில் உள்ள அமர்வு நீதிமன்றம் 1982இல் வழக்கை விசாரித்து, மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது. ஆயுள் தண்டனையை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். சட்ட செயல்முறை பற்றிய அறிவு குறைவாலும், தன்னிடம் போதிய ஆதாரங்கள் இல்லாததாலும் லக்கான் காலத்தின் பிடியில் சிக்கினார்.
இவருடன் கைதான இருவரும் சிறையிலேயே உயிரைவிட்டனர்.
லக்கான் மீது குற்றம் இல்லை என்பதை நிரூபிக்க அவரின் 5 மகள்களும் போராடி. வழக்கிற்காக பல வழக்கறிஞர்களை நாடியுள்ள நிலையில் பலர் காசை வாங்கிவிட்டு ஏமாற்றி சென்றுள்ளனர். கிட்டத்தட்ட 5 சதாப்தங்களுக்கு பிறகு, மே 2, 2025 அன்று, அலகாபாத் உயர் நீதிமன்றம் குற்றத்தை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லாதது மற்றும் பல நடைமுறை முறைகேடுகளைக் சுட்டிக்காட்டி அவரை விடுதலை செய்துள்ளது.
விடுதலை குறித்து லக்கன் சரோஜ்
“இந்த நாளைப் பார்ப்பதற்கு உயிருடன் இருப்பேன் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை. என் மகள்கள் என் அப்பாவித்தனத்தை நம்பினர். அவர்கள் எனது சட்டப் போராட்டம் முழுவதும் என்னுடன் நின்றனர்,” என்று கண்களில் பல உணர்ச்சிகள் வெளிவர பேசினார். விடுதலைக்குப் பிறகு எப்படி உணருகிறீர்கள் என்ற கேள்விக்கு, ஆழமான புன்னகையுடன், எனக்கு வயது 80ஆ அல்லது 104-அ என்பது முக்கியமல்ல. நான் இப்போது சுதந்திரமாக இருக்கிறேன்”
என்று தெரிவித்துள்ளார்.