டெஹ்ரான்:

ரான் நாட்டில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நடைபெற்ற பயங்கர வெடி விபத்தில் 35க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்  பலியானதாக கூறப்படுகிறது. மேலும் பலர் சுரங்கத்தினுள் சிக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஈரான் நாட்டில் வடக்குப் பகுதியில் ஸெமெஸ்டான்யுர்ட் என்ற நிலக்கரி சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தில் சுமார் 500 தொழிலாளர்கள் ஷிப்ட் முறையில் பணியாற்றி வருகின்றனர்.

நேற்று இந்த  சுரங்கத்தினுள் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக சுரங்கத்தை சுற்றி உள்ள .  மண் சரிந்து பல தொழிலாளிகள் சிக்கிக் கொண்டனர்.

இந்த பயங்கர  விபத்தில் சிக்கி 35 தொழிலாளர்கள்  உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் 21 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும், 69க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் இதில் 39 பேர் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் ஈரான் நாட்டு செய்தி நிறுவனங்கள் தகவல்கள் வெளியிட்டு உள்ளது.

சுமார் 2 கிலோ மீட்டர் நீளமுடைய இந்த சுரங்கத்தில் இன்னும் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.