நியூயார்க்: தனது வளர்ப்பு நாய் மீதுகொண்ட அதீதப் பிரியத்தால் ஒரு அமெரிக்கர் ரூ.42 கோடிகள் செலவுசெய்து, அன்பின் முன்னால் பணமெல்லாம் ஒரு விஷயமா! என்று நிரூபித்துள்ளார்.
அது ரெட்ரீவர் ரக நாயாகும். டேவிட் மெக்நெய்ல் என்ற பெயர் கொண்ட அந்த மெரிக்கர், பிரபலமான கார் உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருக்கிறார்.
அவரின் செல்ல நாய்க்கு இருதயத்தில் கட்டி வந்திருந்ததோடு, ரத்தக்குழாய் புற்றுநோயாலும் அது பாதிக்கப்பட்டிருந்தது. அந்நாய்க்கு கால்நடை மருத்துவர்கள் வெற்றிகரமாக சிகிச்சையளித்துக் காப்பாற்றினர்.
அந்த மருத்துவர்களை கெளரவிக்கும் பொருட்டு, சூப்பர் பவுல் கால்பந்தாட்டப் போட்டியில், நாய்களுக்கான புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரூ 42 கோடி செலவில் விளம்பரம் வெளியிட்டுள்ளார். அவரின் இந்த செயல்தான் ஆச்சர்ய செய்தியாகியுள்ளது!