சென்னை:
தமிழக ஊராட்சித்துறை செயலாளராக அமுதா ஐஏஸ் நியமனம் செய்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளராக அமுதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசின் பணியிலிருந்த அமுதா ஐஏஸ் அண்மையில் மாநில பணிக்குத் திரும்பிய நிலையில் அவருக்குப் புதிதாகப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று தொழிற்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராகக் கிருஷ்ணன் ஐஏஎஸ், தொழிற்துறை முதன்மை செயலாளராக இருந்த முருகானந்தம் நிதித்துறை முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel