மும்பை

தெற்கு ஆசிய நாடுகளில் இந்தியாவில் தான் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளதாக ஒரு சர்வே தெரிவிக்கிறது.

கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை 15 நாட்களுக்கு ஒரு முறை நிர்ணயம் செய்துக் கொள்ளலாம் என முன்பு அரசு சொல்லி இருந்தது.  தற்போது அந்த முறை மாற்றப்பட்டு, தினமும் விலையை மாற்றி அமைக்க நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   இதனால் கடந்த ஜூலை 1ஆம் தேதி விலையோடு ஒப்பிடுகையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 6.17ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.69ம் உயர்ந்துள்ளது.

செப்டம்பர் மாத துவக்கமான 1ஆம் தேதியில் இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ. 69.26ம் டீசல் விலை ரூ. 57.13ம் ஆக ஒரு லிட்டருக்கு விற்கப்பட்டது.   அதே நாளில் மற்ற நாடுகளில் உள்ள பெட்ரோல் டீசல் விலை பின்வருமாறு:

Country                                                   Petrol                            Diesel
இந்தியா                                              69.26                            57.13
பாகிஸ்தான்                                      42.14                            46.93
இலங்கை                                            53.47                            39.69
நேப்பாளம்                                         61.24                             46.24
பூட்டான்                                              62.21                            56.05
வங்கதேசம்                                        69.91                            51.05
மலேசியா                                           32.19                            31.59
இந்தோனேசியா                              40.58                             43.36
விலைகள் இந்திய ரூபாய் மதிப்பில் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.  இவைகளில் வங்கதேசத்தில் மட்டும் பெட்ரோல் இந்தியாவின் விலைக்கு மிக அருகில் இருந்தாலும் டீசல் விலை இந்தியாவை விடக் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் பெட்ரோல், டீசல் மீதான வரியே ஆகும்.

பெட்ரோல் விலை கணக்கீடு (செப்டம்பர் 2, 2017ன் படி)

சுத்தீகரிப்பு ஆலையில் இருந்து வாங்கும் விலை           26.65
டீலருக்கு வழங்கப்படும் விலை (வரி இல்லாமல்)           29.96
கலால் வரி                                                                                 21.48
டீலர் கமிஷன்                                                                             3.24
VAT@27 (including VAT on dealer commission)                           14.76
சில்லறை விலை                                                                      69.43

 

டீசல் விலை கணக்கீடு (செப்டம்பர் 2, 2017ன் படி)

சுத்தீகரிப்பு ஆலையில் இருந்து வாங்கும் விலை                26
டீலருக்கு வழங்கப்படும் விலை (வரி இல்லாமல்)               29.25
கலால் வரி                                                                                      17.33
டீலர் கமிஷன்                                                                                 2.17
VAT@16.75% (including VAT on dealer commission)                       14.76
சில்லறை விலை                                                                           57.21

எனவே பெட்ரோல் டீசல் ஆகிய இரண்டும் ஜி எஸ் டி க்கு கீழ் கொண்டு வரப்பட்டால், கலால் வரி, வாட் ஆகிய இரண்டும் சேர்ந்தே அதிகபட்சமாக 28% மட்டுமே இருக்கும்.   பல கோரிக்கைகள் எழுப்பியும் பெட்ரோல் டீசலை ஜி எஸ் டிக்கு கீழ் கொண்டு வர மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.