லண்டன்:
வடக்கு எத்தியோப்பியாவில் கடந்த ஆண்டு 24 மணி நேரத்திற்குள் நூற்றுக்கணக்கான பொது மக்களை எரித்திரிய படைகள் கொன்றதாக சர்வதேச பொதுமன்னிப்பு சபை குற்றம் சாட்டியது. இது மனித குலத்திற்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28, 29 ஆம் தேதிகளில் எரித்திரியா படைகள் நூற்றுக்கணக்கானவர்களை கொன்றதாக பொதுமன்னிப்பு சபை குற்றம் சாட்டியுள்ளது.
வடக்கு எத்தியோப்பியாவின் பழங்கால நகரமான ஆக்சூமில் எரித்திரிய படைகளால் “பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள்” படுகொலை செய்யப்பட்டதை விவரித்த 41 சாட்சிகளுடன் தாங்கள் பேசுவதாக சர்வதேச பொதுமன்னிப்பு சபை தற்போது தெரிவித்துள்ளது.
உள்ளூர் போராளிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கொலைகள் நடந்ததாகவும், எரித்திரிய வீரர்கள் ஆண்களையும், சிறுவர்களையும் தெருக்களில் தூக்கிலிட்டு கொன்றதாகவும் சர்வதேச பொதுமன்னிப்பு சபை தெரிவித்துள்ளது, ஆனால் இதனை எரித்திரிய படைகள் மறுத்துள்ளன.