சென்னை
மமுக பொருளாளர் வெற்றிவேல் கொரோனாவால் உயிர் இழந்துள்ளார்.

அமமுக பொருளாளர் வெற்றிவேல் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆவார்.
இவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
அதையொட்டி வெற்றிவேல் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு அங்கு உடல்நிலை மோசமடைந்ததால் வெண்டிலேடர் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சை பலனின்றி இன்று மாலை வெற்றிவேல் உயிர் இழந்தார்.
அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.