maxresdefault
விஞ்ஞானத்தின் அதீத வளர்ச்சியில் பயணித்துக் கொண்டிருக்கும் நமக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் என்ற ஒன்று கண்டிப்பாக் நிகழ்ந்திருக்கும் அதை பற்றி நாம் ஒரு நிமிடமாவது நினைத்து பார்த்திருப்போமா, உதாரணமாக ஒரு வயதான அம்மா ஒருவர் சிக்கினலில் நின்று கொண்டிருக்கும் போது நம்மிடம் வந்து பிச்சை கேட்பார்கள், இந்த சமுதாயத்தில் எத்தனை பிள்ளைகள் தங்கள் அம்மா, அப்பாவை கடைசி காலத்தில் உட்கார வைத்து சோ போடுகின்றார்கள். இந்த காலத்தில் அன்பும், பாசமும் முற்றிலும் காணாமல் போய் விட்டது என்று தான் நினைக்கின்றோம்.
லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவர்கள் மூன்றாவது படத்தை இயக்கியுள்ளார், இதற்கு முன்பு இயக்கிய படங்களை விட சமுதாயத்துக்கு நல்ல விஷயத்தை கண்டிப்பாக சொல்ல வேண்டும் அதுவும் இன்றைய இளைய தலைமுறையை சவுக்கால் அடிக்க வேண்டும் என்று அம்மணி படத்தை எடுத்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் கதையை பொறுத்த கணவனை இழந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கணவன் அரசாங்க ஹாஸ்பித்திரியில் வேலை செய்யும் போது இறந்ததால் அவருக்கு அங்கு சுத்தம் செய்யும் வேலை கிடைக்கின்றது இவருக்கு இரண்டு மகன்கள் ஒருவன் பெயிண்டராக வேலை செய்கின்றான் இவன் மாகா குடிகாரனாக படம் முழுக்க வலம் வருகின்றான், இன்னொரு மகன் ஆட்டோ டிரைவர் மனைவியின் சொல்லே மந்திரம் மத்ததெல்லாம் தந்திரம் என்று இருப்பவன்.
லக்ஷ்மிராமகிருஷ்ணனுக்கு சொந்தமாக வீடு அரசாங்க வேலை, வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். அதில் தான் அம்மணி எனும் அந்த மூதாட்டி தங்கியுள்ளார். யார் இந்த அம்மணி என்றால் இவர் தனது மகன்களாலும் சொந்தங்களாலும் கணவன் இறந்த பின் நிராகரிக்கப்பட்டவர், அதனால் நான் சாகும் வரை உழச்சி சாப்பிடுவேன் அது மட்டுமல்ல நாலு பேருக்கு சாப்பாடும் போடுவேன் என்று வாழ்பவர்.
ஒரு நாள் லஷ்மி ராமகிருஷ்ணனின் மகன்களிடையே பிரச்சனை பெரிதாக வெடிக்கிறது. உடனே ஆட்டோ டிரைவராக நடித்திருக்கும் நிதின் சத்யா லஷ்மி ராமகிருஷ்ணனிடம் வீட்டை என் பெயரில் எழுதி வைத்துவிடு என்று கேட்க, ஒரு மனதாக எழுதி வைத்துவிடுகிறார். பெயிண்டர் மகனுக்கு ஒண்ணுமே இல்லையே என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே வீட்டில் பூகம்பம் வெடிக்கிறது. நிதின் சத்யா அவருடைய அண்ணன் மற்றும் அண்ணியை அசிங்கமாக பேசி வீட்டைவிட்டு வெளியே போ என்று கடுமையான வார்த்தைகளால் திட்டிவிடுகிறார். பெத்த புள்ளைங்க இப்படி நம் கண் முன்னே அடிச்சிகிட்டு சண்டை போடுதேன்னு மனசுக்குள்ள நொந்து வீட்டைவிட்டு யாரிடமும் சொல்லாமல் வெளியேறுகிறார். மறுநாள் லஷ்மி ராமகிருஷ்ணன் என்ன ஆனார்? என்பதோடு படம் முடிகிறது.
பெத்தவங்க இருக்கும்போது அவங்க அருமை புரியாது, அதுவே அவங்க தவறிட்டா அய்யோ அம்மா, அய்யோ அப்பா என்று பழைய நினைவுகள் மனதில் வந்து கண்களில் தாரை தாரையாக தண்ணீர் கொட்டும். அந்த அன்பை அவர்கள் உயிரோடு இருக்கும்போது நினைத்து பார்த்தால் பல முதியவர்கள் இன்று சிக்னலில் நம் கையை தொட்டும் தொடாமலும் பிச்சை கேட்க மாட்டார்கள்.
சித்ரவதை, சூனியம் என இருந்தா காலம் மாறி பெற்றோர்களை பிச்சை எடுக்க வைக்கும் காலத்தில் பயணிக்கும் நமக்கு சரியான சவுக்கடி கொடுத்து இனிமேலாவது ஒழுங்கா இருங்கடா என்று கூறியிருக்கிறார் இயக்குனர் லஷ்மி ராமகிருஷ்ணன்.
இந்த படத்தின் கரு உருவாகியதே “சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சி மூலம்தான் என்பதை கடைசியில் நமக்கு விஷுவலாக காட்டுகிறார்கள். அதில் நிஜமான அம்மணியாக ஒரு பாட்டி அமர்ந்திருக்க. ஓஹோ இந்த பாட்டியை பற்றிதான் இவ்ளோ நேரமா நம்ம பார்த்திட்டு இருந்தோமா என்று மனதை கனக்க வைத்துவிடுகிறார்.
லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கிய மூன்றாவது படம். தரமான படைப்பாக நம்மை நினைக்க வைக்கிறது. வாழ்த்துகள் லஷ்மி ராமகிருஷ்ணன்.