ராமண்ணா வியூவ்ஸ்::
நண்பர் பாலனிடம் இருந்து இன்று வந்த மெயில்:
“தினமணி”, ரஞ்சித்தைப் பற்றி எழுதிய விதத்திற்கும், “கபாலி”யில் பெரியாரை ரஞ்சித் புறக்கணித்ததுக்கும் வித்தியாசம் கிடையது.
இரண்டுமே தவறான வெறுப்பினால் ஏற்பட்ட உணர்வே. இன்று பெரியார் இருந்திருந்தால், ரஞ்சித் மீதான தினமணியின் வன்மத்துக்கு முதல் எதிர்ப்புக்குரல் அவரிடமிருந்துதான் வந்திருக்கும்.
“தினமணி” திருந்தப்போவதில்லை.
ஆனால், ரஞ்சித், “பெரியார் படம் தெரியாமல் விடுபட்டுவிட்டது” என்று சொல்லி வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
நம்புவோம்.
ஆகவே, புத்தகப்பிரியரான ரஞ்சித் அவர்களுக்கு, “மலேசியா சிங்கப்பூரில் பெரியார்” என்ற புத்தகத்தை பரிசாக பரிந்துரைக்கிறேன். (அவர்தான் வாங்கிப்படிக்க வேண்டும்.)
எழுதியவர் கி. வீரமணி என்பதால் இந்த புத்தகத்தை ஒதுக்க வேண்டியதில்லை. எழுதப்பட்டவை அனைத்தும் உண்மையே. வரலாற்றுத் தரவுகளே.
ரஞ்சித்தின் பார்வை பரந்துபட்டு விரிவதற்கு இந்த புத்தகமும் உதவும்… அவரைப்போன்ற எண்ணம் கொண்ட பலருக்கும்கூட !”