இந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன், சினிமா உலகில் காலடி எடுத்து வைத்து 52 ஆண்டுகள் ஆகிறது

“சாத் இந்துஸ்தானி” என்ற படத்தில் நடிக்க அவர் ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து போட்ட தினம் – 15.02.1969.

அதே ஆண்டு நவம்பர் மாதம் அந்த படம் ரிலீஸ் ஆனது.

ஆரம்பத்தில் ‘டப்பா’ படங்களை கொடுத்த அமிதாப்பச்சன் ‘சஞ்சீர்’ படத்தில் ஆக்ரோஷ இளைஞராக உருவெடுத்தார்.

‘ஷோலே’ ‘டான்’ போன்ற படங்கள் அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றன.

90 களில் அவருக்கு போதாத வேளை.

‘ஏ.பி.சி.எல்’ என்ற பெயரில் சினிமா கம்பெனி ஆரம்பித்தார்.

பெரும் நஷ்டம்.

காசு சம்பாதிக்க, சின்னத்திரை பக்கம் ஒதுங்கினார்.

குரோர்பதி, நிகழ்ச்சியில் பங்கேற்போருக்கு கோடி ரூபாய் கொடுத்தார்.

இதன் மூலம் அவரும் கோடிகளை சம்பாதித்தார்.

மனிதருக்கு இன்றைக்கு 78 வயது ஆகிறது.

ஷாரூக்கான், சன்மான் கான், அமீர்கான் என ‘கான்’ பட்டாளம், இந்தியில் ஆதிக்கம் செலுத்தினாலும், அமிதாப்பச்சன் கைவசம் நான்கு படங்கள் இன்றைய தேதியில் உள்ளன.

– பா. பாரதி