மகாராஷ்டிராவை மையமாக கொண்டு தேசியவாத காங்கிரஸ் என்ற கட்சியை நடத்தி வரும் சரத்பவார், அந்த மாநிலத்தில் முதல்-அமைச்சராக இருந்தவர்.

அவரது கட்சியை சேர்ந்த அமைச்சர் அனில் தேஷ்முக் “மாதம் தோறும் 100 கோடி மாமூல் வசூலித்து தனக்கு தரவேண்டும்” என போலீசாரை நிர்ப்பந்தம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அந்த மாநில கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சரத்பவார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை குஜராத்தில் ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி பரபரப்பை உருவாக்கி உள்ளது.

அகமதாபாத்தில் தொழில் அதிபர் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பு முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பா.ஜ.க. பக்கம் சரத்பவார், சாய்கிறார் என பேச்சு எழுந்துள்ளது. இந்த சந்திப்பு குறித்து அமித்ஷாவிடம் கேட்டபோது “எல்லா சந்திப்புகளையும் பகிரங்கமாக சொல்ல முடியாது” என குறிப்பிட்டார்.

அதாவது மறுக்கவும் இல்லை.ஒப்புக்கொள்ளவும் இல்லை.

மகாராஷ்டிராவில் ஏதோ நடக்கப்போவது உறுதி என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

– பா. பாரதி