ஜின்னா வழியில் அமித் ஷா

Must read

த்தீஸ்கர்

மித் ஷா சமீபத்தில் ஒரு கூட்டம் ஒன்றில் காந்தி ஒரு திறமையான பனியா (வியாபாரி) எனக் கூறியது முன்பு ஜின்னா காந்தியை இந்து பனியா என அழைத்ததை ஒத்துப் போகிறது.

அமித் ஷா பாஜக வின் தலைவர்களில் முக்கியமானவர்.  இந்துத்வா கொள்கையை தனது ஆர் எஸ் எஸ் காலத்திலிருந்தே பின்பற்றுபவர்.   மற்ற பாஜக தலைவர்களைப் போல் இவரும் காந்தியை விரும்பாதவர்களில் ஒருவர்.  இவர் சத்தீஸ்கரில் நடந்த கூட்டம் ஒன்றில் இந்தியில் “பஹூத் சாதுர் பனியா தா வோ” எனக் கூறியது அனைவரும் அறிந்ததே.  இதற்கு அவர் ஒரு திறமையான வியாபாரி என பொருள்.

இதிலிருந்து ஒன்று புலனாகிறது.  காந்தியை அமித் ஷா ஒரு தேசப்பிதாவாகவோ அல்லது குறைந்தது ஒரு தேசத் தொண்டராகவோ கூட மதிக்கவில்லை.   அது மட்டும் அல்ல, அமித் அவரை அவரது ஜாதியின் மூலமாகவே அடையாளம் காட்டுகிறார் என்பதும் தெளிவாகிறது.

அதே நேரத்தில் காந்தியை முன்பு ஜின்னா இந்து பனியா என அவருடைய ஜாதியைக் குறிப்பிட்டு சொல்வது வழக்கம்.  அதாவது காந்தி இந்துக்களுக்கு மட்டுமே ஆதரவாளர் என ஜின்னா கருதியதால் இந்த வார்த்தையை உபயோகித்தார்.  இதன் மூலம் காந்தியை இந்து மதத்திற்குள் அடக்கி வைத்தார் ஜின்னா. தற்போது அதே போல பனியா என்னும் சொல்லை உபயோகித்து காந்தியை ஒரு குறிப்பிட்ட ஜாதிக்குள் அடக்கி வைத்துள்ளார் அமித் ஷா.

More articles

Latest article