டில்லி
விவசாயிகளின் பலத்த எதிர்ப்பை மீறி வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
சமீபத்தில் பாஜக தாக்கல் செய்த வேளாண் மசோதாக்களுக்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
ஆயினும் எதிர்ப்பை மீறி குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.
இந்த மசோதாவுக்கு எதிராக நாடெங்கும் உள்ள விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆயினும் எதிர்ப்புக்களுக்கு இடையே குடியரசுத் தலைவர் இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த ஒப்புதலை அடுத்து மத்திய அரசு வேளாண் மசோதாக்களை அரசிதழில் வெளியிட்டுள்ளது.