சியோல்
தென் கொரிய நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியான அதிபர் மூன் ஜேவின் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

உலகெங்கும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது.
இதையொட்டி பல நாடுகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நடமாட்டம் முடங்கப்பட்டதால் அனைத்து நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தென் கொரியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடந்தது.
இன்று பதிவான வாக்குகள் வாக்குகள் எண்ணப்பட்டன.
தென் கொரியாவில் 300 இடங்களுக்கு நடந்த தேர்தலில் தற்போதைய அதிபரின் ஆளும் கட்சி 180 இடங்களைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது.
அதிபர் மூன் ஜே கொரோனாவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் அவருக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளதாக கூறப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel