ஸ்ரீநகர்: பக்தர்களின் வருகை குறைந்துள்ளதால், பகவதி நகர் அடிவார முகாமில் இருந்து  அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரபலமான அமர்நாத் புனித யாத்திரை, ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான சிவ பக்தர்களால் மேற்கொள்ளப்படுகிறது. மொத்தம் 3880 மீட்டர் உயரத்தில் இருக்கும் கோவிலுக்கு தினமும்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வழிபாடு நடத்திவிட்டு திரும்புகின்றனர். இந்த ஆண்டுக்கான  43 நாள் வருடாந்திர யாத்திரை ஜூன் 30 அன்று இரட்டை வழிகளில் இருந்து தொடங்கியது  ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 3,880 மீட்டர் உயரமுள்ள குகைக் கோவிலுக்கு அனந்த்நாக்கில் உள்ள பாரம்பரிய 48-கிமீ நுன்வான்-பஹல்காம் பாதை மற்றும் கந்தர்பாலில் 14-கிமீ குறுகிய பால்டால் பாதை மற்றும் ஆகஸ்ட் 11 அன்று “ரக்ஷா பந்தனுடன்” இணைந்த “ஷ்ரவண பூர்ணிமா” அன்று முடிவடைய திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரை 3 லட்சம் பேர் புனித யாத்திரை சென்றுள்ளனர். ஆனால், கடந்த சில நாட்களாக பக்தர்கள் வராததால் ஜம்முவில் உள்ள பகவதி நகர் மலையடிவார முகாம் வெறிச்சோடி காணப்படுகிறது. “ஜம்முவில் இருந்து அமர்நாத் யாத்திரை போதிய எண்ணிக்கையிலான யாத்ரீகர்கள் இல்லாததால் இடைநிறுத்தப்பட்டது. யாத்ரீகர்களின் இருப்பைப் பொறுத்து, யாத்திரை முடிவதற்குள் இன்னும் ஒரு தொகுதியை அனுப்புவோம்” என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

பகவதி நகர் அடிப்படை முகாம் கடந்த சில நாட்களாக வெறிச்சோடி காணப்படுவதால், சமூக சமையலறை நடத்துபவர்கள் தங்கள் சேவைகளை நிறுத்துமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

வரும் நாட்களில் மோசமான வானிலை மற்றும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திப்பதால் பக்தர்கள் வருகை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.