வாஷிங்டன்
இறந்து போன தனது வளர்ப்பு நாயின் நகலை குளோனிங் முறையில் உருவாக்க ஒரு அமெரிக்க பெண் 50000 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.32,50,000) செலவு செய்துள்ளார்.
செல்லப்பிராணிகள் வளர்க்கும் வழக்கம் அமெரிக்கர்கள் மத்தியில் மிகவும் உள்ளது. அமெரிக்காவில் வளர்ப்புப் பிராணிகளுக்காக ரூ.420 கோடிக்கு மேல் செலவு செய்யப்படுகிறது என அமெரிக்க வளர்ப்புப் பிராணிகளுக்கான பொருட்கள் விற்போர் சங்கம் தெரிவிக்கிறது. தவிர வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் தங்க சிறு கூண்டு போன்ற வீடுகள் மட்டும் சுமார் 3 லட்சத்துக்கு மேல் விறபனை ஆகி உள்ளது.
அவ்வாறு வளர்க்கப்படும் நாய்களில் சிவுவாவுவா என்னும் சிறிய அளவிலான நாய்க்குட்டிகள் மிகவும் பிரபலமாக உள்ளன. அழகிய கண்களுடனும், சிறிய உருவத்துடனும், குறைந்த ரோமத்துடனும் உள்ள இந்த நாய்கள் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவை சேர்ந்த வெஸ்டர்வெல்ட் என்னும் பெண்மணி சிவுவாவுவா நாய் ஒன்றை வளர்த்து வந்தார். அந்த நாய் தனது 10 ஆவது வயதில் திடிரென மரணம் அடைந்தது.
எனவே வியாகின் பெட்ஸ் என்னும் வளர்ப்பு பிராணிகள் மையத்தை அணுகி இறந்த அந்த நாயின் நகலை குளோனிங் முறையில் செய்து தரச் சொன்னார். அந்த நிறுவனம் அதே போல் ஒரு நாயை உருவாக்கி தந்துள்ளது. இதற்கு சுமார் ரூ.32,50.000 செலவாகி உள்ளது. அந்த நாயின் குளோனிங் நகல் அச்சு அசலாக இறந்து போன நாய் போலவே இருப்பதாக அந்தப் பெண்மணி தெரிவித்துள்ளார்.
வியாகின் பெட்ஸ் நிறுவனம் இது போல குளோனிங் முறையில் பலருடைய செல்லப் பிராணிகளின் நகலை தயாரித்து தருகிறது. இவ்வாறு உருவாக்க நாய்கள் என்றால் சுமார் ரூ.32,00,000 எனவும் பூனைகள் என்றால் அதில் பாதியும் செலவாகும் என அறிவித்துள்ளது.