வாஷிங்டன்
அமெரிக்கா மாநிலங்களில் ஒன்றன ஒக்லோமா மாநிலம் நைட்ரஜன் வாயுவை செலுத்தி மரண தண்டனை வழங்க ஆலோசித்து வருகிறது.
இந்தியாவில் மரண தண்டனை தூக்கிலிட்டு நிறைவேற்றப் படுகிறது. அதே நேரத்தில் அமெரிக்க மாநிலங்களில் இவ்வாறு தூக்கிலிடுவதால் மரணிப்போருக்கு மிகவும் வலியால் துன்பம் நேரிடுவதாகக் கூறி விஷ மருந்தை ஊசியின் மூலம் செலுத்தி மரண தண்டனையை நிறைவேற்றுகின்றனர்.
அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான ஓக்லோமா மாநிலத்தில் இது போல விஷ மருந்துகளை செலுத்தி மரண தண்டனை வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதனால் விஷ மருந்து உற்பத்தியாளர்கள் தங்கள் பணியை நிறுத்தி விட்டனர். இதையொட்டி அம்மாநில அரசு வழக்கறிஞர் மைக் ஹண்டன் மற்றும் தண்டனைத்துறை இயக்குனர் ஜோ அல்பா ஆகியோர் ஒரு யோசனை தெரிவித்துள்ளனர்.
அந்த யோசனையின் படி அம்மாநில அரசு மரண தண்டனை விதிக்க நைட்ரஜன் வாயுவை செலுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் இந்த முறையை அனுமதித்து வேறு ஒரு வழியை விரைவில் கண்டறியலாம் என அரசு உத்தேசித்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அரசின் மரண தண்டனைக் கூடத்தில் கடந்த் 2015 ஆம் வருடத்தில் இருந்து மரண தண்டனை நிறைவேற்றப் படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.