அமெரிக்க பாடகி நிர்வாணமாக தேர்தல் பிரச்சாரம்!

Must read

மெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நிர்வாணமாக பிரச்சாரம் செய்து பரபரப்பை கிளப்பியிருக்கிறார் அந்நாட்டு பிரபல பாடகி.

கேட்டி பெர்ரி.
கேட்டி பெர்ரி.

அமெரிக்காவில் புகழ் பெற்ற பாடகிகளில் ஒருவர் கேட்டி பெர்ரி. இவருக்கு நாடு முழுதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
விரைவில் வர இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டனை, இந்த பாடகி ஆதரிக்கிறார். அதற்காக பிரச்சாரம் செய்ய முடிவு செய்தார்.
வீடியோ மூலமாக ஹிலாரிக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்வது என்று முடிவானது. அதே நேரம் தனது பிரச்சாரம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்த பாடகி கேட்டி பெர்ரி, விபரீத முடிவெடுத்தார்.
அதாவது நிர்வாணமாக தோன்றி வாக்கு கேட்பதுதான் அந்த விபரீத முடிவு.
"பிரச்சார" வீடியோ(!)வில்..
பிரச்சார” வீடியோ(!)வில்..

அந்த வீடியோவின் ஆரம்பத்தில், அமெரிக்க கொடியின் வண்ணத்தில் ஆடை அணிந்து வரும், கேட்டி பெர்ரி, “தேர்தலில் அனைவரும் வாக்களியுங்கள்” என்று கூறி ஜனனாயகத்தை வளர்க்க விழிப்புணர்வு பிரச்சாரம் செய்கிறார்.
பிறகு, “நான் இரவில் எப்போதும் நிர்வாணமாக படுத்து உறங்கவே விரும்புகிறேன்” என்று கூறி, தனது ஆடைகளை களைந்து  நிர்வணமாகிறார்.
அப்போது, போலீஸ் உடையில் வரும் இருவர் பாடகியை கைது செய்வது போல அந்த வீடியோ காட்சி நிறைவடைகிறது.
தற்போது இந்த வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 

More articles

Latest article