வாஷிங்டன்:
அமெரிக்காவின் குடியரசு கட்சி எம்.பி.க்கள் குடும்பத்துடன் மேற்கு வர்ஜினியா மாகாணத்துக்கு ரெயிலில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர்.

இந்த ரெயில் சார்லோட்டஸ்வில்லி என்ற நகரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ஒரு குப்பை லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் லாரி டிரைவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். லாரியில் இருந்த மற்றொருவர் காயமடைந்தார்.
இந்த விபத்தில் எம்.பிக்கள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. சிறிது நேர தாமத்திற்கு பின் ரெயில் புறப்பட்டுச் சென்றது. விபத்து குறித்து சார்லோட்டஸ்வில்லி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel