டெல்லி: டெல்லி அம்பேர்கர் விவகாரத்தில், எதிர்க்கட்சி ஆளுங்கட்சி இடையே நாடாளுமன்ற வளாகத்தில் மோதல் ஏற்பட்ட நிலையில், உள்துறை அமித்ஷா மீது மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் கார்கே உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளார். இதற்டிகிடையில், அமித்ஷா மன்னிப்பு கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் அரசியல் சாசனம் பற்றிய 2 நாள் விவாதத்தின் முடிவாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசும்போது, அம்பேத்கரை வைத்து அரசியல் செய்வதாக எதிர்க்கட்சிகள் குறித்து விமர்சனம் செய்தார். அம்பேத்கர் பற்றி அமித்ஷா பேசியது அரசியல் வட்டாரங்கள் இடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள் கோஷம் எழுப்பியதால், அவை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், மக்களவை மற்றும் மாநிலக்ஙளவையை அதன் தலைவர்கள் ஓம் பிர்லா, ஜெகதீப் தன்கர் மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தனர்,.
முன்னதாக, மாநிலங்களைவியல், உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது மாநிலங்களவை காங்கிரஸ் கட்சி தலைவரான கார்கே உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தார்.
“டிசம்பர் 17, 2024 அன்று ராஜ்யசபாவில் டாக்டர் அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக மத்திய உள்துறை அமைச்சருக்கு எதிராக ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே சிறப்புரிமை நோட்டீஸ் சமர்ப்பித்துள்ளார்” என்று காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் ட்வீட் செய்துள்ளார்.