ஐதராபாத்: அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தனது ஓய்வை அறிவித்து, பின்னர் அதை வாபஸ் வாங்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பதி ராயுடு, ஐதராபாத் கிரிக்கெட் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த மாதத்தின் பிற்பகுதியில் நடக்கும் விஜய் ஹசாரே கோப்பை போட்டிக்காக இவர் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
உலகக்கோப்பை போட்டியின்போது தொடர்ந்து புறக்கணிக்கப்பட்ட காரணத்தினால் அனைத்துவகை அனைத்துவகை போட்டிகளிலிருந்தும் தனது ஓய்வை அறிவித்தார் அம்பதி ராயுடு.
கடந்த 2018ம் ஆண்டு, குறைந்தபட்ச ஓவர் கிரிக்ெட்டில் கவனம் செலுத்துவதற்காக முதல்தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் அம்பதி ராயுடு. ஏனெனில், தனது காயங்களிலிருந்து மீண்டு, அவர் இந்திய ஒருநாள் அணிக்கு திரும்பியிருந்தார்.
கடந்த காலங்களில், மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் தனது சிறப்பான செயல்பாட்டை பதிவுசெய்துள்ளார் ராயுடு.