டெல்லி: நடப்பாண்டு அமர்நாத் யாத்திரையில் தற்போது வரை 3 லட்சத்து 75 ஆயிரம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமர்நாத் யாத்திரை நடப்பாண்டு ஜூலை  3-ஆம் தேதி தொடங்கியது.  பஹல்காம் மற்றும் பால்டால் ஆகிய இரட்டை பாதைகளில் அமர்நாத் யாத்திரை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரை ஆகஸ்டு 9ந்தேதி முடிவடைய நிலையில், இதுவரை 3 லட்சத்து 75 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

இந்த அமர்நாத்யாத்திரையில்   அமெரிக்கா, ஜெர்மனி உட்பட ஆறு நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்ட நிலையில், இந்தியாவிலும் பல லட்சம் மக்கள் கலந்துகொண்டனர்.

கடந்த 3-ஆம் தேதி யாத்திரை தொடங்கியதில் இருந்து இரண்டு லட்சம் 75ஆயிரத்துக்கும்  மேற்பட்ட பக்தர்கள் குகைக் கோயிலில் தரிசனம் செய்துள்ளனர்.

குறிப்பாக, நேற்று  அதிகாலை மட்டும்,   2 ஆயிரத்து 324 பேர் தரிசனம் செய்யச் சென்றுள்ளனர். அதேவேளை, நடப்பு ஆண்டு அமர்நாத் யாத்திரை வரும் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், பனி லிங்கத்தைத் தரிசிக்க இன்னும் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு அமர்நாத் யாத்திரையில் 5 லட்சத்து 10 ஆயிரம் பக்தர்கள் பனி லிங்கத்தைத் தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.