டெல்லி
இந்திய தொல்லியல்துறை இயக்குநராக கீழடி அகழாய்வை முன்னெடுத்த அமர்நாத் ராமகிருஷ்ணா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது, கண்காணிப்பாளராக இருந்தவர் அமர்நாத் ராமகிருஷ்ணா ஆவர். இவரது தலைமையில் இந்திய தொல்லியல் துறையின் சார்பாக நடைபெற்ற 3 கட்ட அகழாய்வில், இரண்டு கட்ட அகழாய்வுப் பணிகள் கீழடியில் நடைபெற்றன. இவர் தலைமையிலான குழுவினர்தான் கீழடியில் பண்டைய காலத்தில் நிலவிய நகர நாகரீகத்தை வெளிக்கொணர்ந்தது.
அகழாய்வில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்லியல் சின்னங்களை வெளிக் கொணரபட்டு. தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பானையோடுகள் கண்டறியப்பட்டன. பல, உறை கிணறுகள், மட்கலன்கள், சூது, பவள மணிகள் ஆகியவை கண்டறியப்பட்டன..
அமர்நாத் ராமகிருஷ்ணா இந்திய தொல்லியல் துறையின் தென் மண்டலத்தின் மூத்த தொல்லியல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த நிலையில், தற்போது இந்திய தொல்லியல் துறையின் இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் டெல்லியில் உள்ள இந்திய தொல்லியல் துறை தலைமை அலுவலகத்தில் இருந்து தனது பணியை மேற்கொள்வார்.