சண்டிகர்,

பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. சட்டசபை காங்கிரஸ் கட்சித்தலைவர் அமரிந்தர் சிங்கை ஆட்சி அமைக்குமாறு கவர்னர் வி.பி.சிங் பத்னோரே அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து,  சண்டிகரில் உள்ள கவர்னர் மாளிகையில் இன்று  காலை நடைபெற்ற விழாவில் முதலமைச்சராக அமரிந்தர் சிங் பதவி ஏற்றுக்கொண்டார்.

அவருக்கு கவர்னர் வி.பி.சிங் பத்னோரே பதவிப்பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். அவருடன்  9 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.  பின்னர் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என  காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் அமைச்சராக பதவி ஏற்றார். அமரிந்தர் சிங் பஞ்சாப் முதலமைச்சராக பதவியேற்பது இது இரண்டாவது முறையாகும். பதவி ஏற்பு விழாவில்  காங்கிரஸ் துணை த் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம், சச்சின் பைலட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 10 ஆண்டுகளுக்கு பின்னர் அங்கு மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.