கொழும்பு:  ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தி இன்று நடைபெற்ற மக்கள் போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. அதைத்தொடர்ந்து அவர் ராஜினானா செய்த நிலையில், அவரது ஆதரவாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே நடைபெற்ற வன்முறையில்,  ஆளும்கட்சியான  ராஜபக்சே கட்சியின்  எம்.பி. ஒருவர் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறையில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், 139 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகியதை தொடர்ந்து இலங்கையில் நடந்த கலவரத்தில் ஆளுங்கட்சி எம்.பி அமரகீர்த்தி அதுகோரலா உயிரிழந்ததாக ஏஎஃப் பி செய்தி நிறுவனம்  தகவல் தெரிவித்துள்ளது . ராஜபக்சே ஆதரவாளர்கள் சென்ற வாகனத்தை மறித்து போரட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, ராஜபக்சே ஆதரவாளர்கள் மற்றும் போரட்டக்காரர்கள் இடையே நடந்த மோதலில் ஆளுங்கட்சி எம்.பி அமரகீர்த்தி அதுகோரலா உயிரிழந்ததாக செய்திகள் பரவி வருகிறது. அதுபோல முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வாகனம் பொதுமக்களால்  ஆற்றுக்குள் தள்ளப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இலங்கையை ராஜபக்சே குடும்பத்தினரே ஆட்சி செய்துவருகின்றனர். அவர்களின் ஊழல் மற்றும் திறமையின்மை காரணமாக, இலங்கை கடுமையான பொருளாதார சிக்கலில் மாட்டி, திவாலாகும் நிலைமையில் உள்ளது. இதனால், அங்கு அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளதுடன், வரலாறு காணாத அளவில் விலை உயர்ந்துள்ளது.

இதனால் கொதிப்படைந்துள்ள இலங்கை மக்கள் ஒன்றுசேர்ந்து, ஆளும் ராஜபக்சே குடும்ப அரசுக்கு எதிராக கடந்த ஒரு மாதமாக போராடி வருகின்றனர். இதைத்தொடர்ந்து பல அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்த நிலையில், பிரதமர் ராஜபக்சே பதவி விலக மறுத்து வருகிறார். ஆனால், பொதுமக்களும், எதிர்க்கட்சியினரும் ராஜபக்சே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அரசு ஆதரவாளர்கள் மற்றும் அவர்களின் வாகனங்கள் போன்றவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், இன்று காலை பொதுமக்கள் போராட்டம் தீவிரமாகி வன்முறையானது. இதனால், காவல்துறையினர் குவிக்கப்பட்டு, தடியடி பிரயோகமும் கண்ணீர் புகைவீச்சும் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதில் பல பொதுமக்கள் காயமடைந்ததாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து, தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அனுப்பினார்.

இதைத்தொடர்ந்து மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ராஜபக்சே ஆதரவளார்கள் பயணித்த வாகனங்கள் மீதும் பொதுமக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பொதுமக்களுக்கு எதிராக ராஜபக்சே ஆதரவாளர்களும் எதிர்த்தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழலில் இன்று இலங்கை காலி முகத்திடல்  பகுதியில் கட்டுக்கடங்காது வன்முறை  வெடித்தது. இதையடுத்து,  அப்பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதுபோல நிட்டம்புவ பிரதேசத்தில் ஏற்பட்ட போராட்டத்தின்போது,  போராட்டக்காரர்கள் மீது துப்பாகி சூடு நடத்தப்பட்டது. இதில், மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டை, ஆளுங்கட்சியின் ஆதரவு கட்சயின பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமானதாக கருதப்படும் வாகனத்தில் வந்த குழுவினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மகிந்த ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியமையைத் தொடர்ந்து நாடு முழுவதும் வன்முறை சம்பவங்கள் அதிகரிததுள்ளமை குறிப்பிடத்தக்கது.  காலி முகத்திடலில் ஏற்பட்ட கலவரம் காரணமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.  இதுவரையில் சுமார் 140 பேர் வரையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் போது போராட்டக்காரர்களின் கூடாரங்களை மகிந்த ஆதரவாளர்கள் தீயிட்டு எரித்துள்ளனர். இதன் காரணமாக பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வன்முறையின்போது, பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் கட்சியைச் சேர்ந்த  எம்.பி அமரகீர்த்தி அதுகோரலா உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ராஜபக்சே ஆதரவாளர்கள் சென்ற வாகனத்தை மறித்து போரட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, ராஜபக்சே ஆதரவாளர்கள் மற்றும் போரட்டக்காரர்கள் இடையே நடந்த மோதலில் ஆளுங்கட்சி எம்.பி அமரகீர்த்தி அதுகோரலா உயிரிழந்ததாக செய்திகள் பரவி வருகிறது.

மற்றொரு இடத்தில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வாகனம் பொதுமக்களால் சூழப்பட்டு அருகே இருந்த ஆற்றினுள் தள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.  மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் மீது  பொதுமக்கள்  தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் இலங்கை போர்க்களம் போல காட்சி அளிக்கிறது.