தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் அமலா பால்.மைனா படத்தில் கிடைத்த வெற்றியின் மூலம் தமிழ் மக்கள் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்துவிட்டார் அமலா பால்.

இவர் கடைசியாக நடித்த ஆடை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

தற்போது இவர் கன்னடத்தில் “யூ டர்ன்” ( U Turn) படம் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் பவன் குமார் இயக்கும், புதிய வெப் சீரிஸான குடி யெடமைதே ( Kudi yedamaithe ) வெப் சீரிஸில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த 8 பகுதிகள் கொண்ட ஆஹா (aha) ஒரிஜினல் தொடர், ரசிகர்கள் இதுவரை கண்டிராத வகையிலான, ஃபேண்டஸி திரில்லராக உருவாகிறது.

இத்தொடரில் அமலா பால் ஜோடியாக ராகுல் விஜய் நடிக்கிறார். இக்கதையின் மையம் ஒரு காவல் துறை அதிகாரிக்கும், டெலிவரி பையனுக்கும் நடக்கும் டைம் லூப்பை அடிப்படையாக கொண்டது. இது தவிர இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கும் Netflix ஆந்தாலஜி சீரிஸிலும் அமலா பால் முதன்மை வேடத்தில் நடிக்கிறார்.

இந்த தொடர் வரும் ஜூலை 16ஆம் தேதி Aha தளத்தில் வெளியாகவுள்ளது.

இன்ஸ்பெக்டர் துர்கா என்னும் காவல்துறை அதிகாரியாக குடி யெடமைத்தே வெப்சீரிஸில் அமலாபால் நடித்திருக்கிறார். முன்னதாக வெளிவந்த டீசர் மற்றும் போஸ்டர்கள் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது நடிகை அமலாபால் நடிக்கும் இன்ஸ்பெக்டர் துர்கா கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.