சென்னை; அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்தும், நீதி கேட்டும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று  பாமக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளள நிலையில், அந்த பகுதியில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சென்னை முழுவதும் பாமக சார்பில்,   Am I Next  (அடுத்தது நானா) என போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது.  இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் திமுக நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த  பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய ஞானசேகரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் உள்ளார்.  இதில் மேலும் பலர் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில்  இன்று பாமக மகளிர் அணி சார்பில் , பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் செளமியா அன்புமணி தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ள நிலையில்,  தடையை மீறி போராட்டம் நடைபெறம் என தெரிகிறது. இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கைது நடவடிக்கைக்காக பேருந்துகளும் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

மேலும்,  சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தை கண்டித்து சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் பாமக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.   சம்பவத்தன்று (டிசம்பர் 23 ஆம் தேதி)  இரவு தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்ததை மறைந்திருந்து வீடியோவாக எடுத்த அந்த நபர், தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் டீனிடம் சொல்லி டிசி வாங்கிக் கொடுத்து விடுவதாக மிரட்டிய அந்த நபர், வீடியோவை மாணவியின் தந்தைக்கும் அனுப்புவதாக தெரிவித்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.   மேலும் அந்த ஞானசேகரன், மாணவியை மிரட்டும் போது யாரோ ஒருவரிடம் போனில் பேசியதாக. புகாரில்  அந்த மாணவி வாக்குமூலம் அளித்தாராம். அந்த மாணவி யாரோ ஒரு சாருடன் இரவு தங்க வேண்டும் என்றும் அந்த நபர் மிரட்டியதாக தெரிகிறது.

இந்த நிலையில் ஆளுநரின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பிரதான கல்லூரியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பாதிக்கப்பட்ட புகாரின் பேரில்  அந்த பகுதியில் பிரியாணி கடை போட்டுள்ள திமுக பிரமுகரான ஞானசேகரன் என்ற 38 வயது நபர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இவர்மீது ஏற்கனவே ஆள்கடத்தல் உள்பட பல வழக்குகள் உள்ளது. பதிவேறு குற்றவாளியான ஞானசேகர் ஆட்சியாளர்கள் ஆதரவுடன் நடமாடி வந்ததாக கூறப்படுகிறது.  இதற்கிடையில், மாணவி கொடுத்த புகார் தொடர்பான  முதல் தகவல் அறிக்கை லீக்கானது, மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்ஆணையர், அருண் குற்றவாளிகளுக்கு சாதகமாக செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தியதும் மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளத. இதனால், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை பூதாகாரமாகி உள்ளன.

இந்த சம்பவத்தை கண்டித்து பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முன்னாள் ஆளுநர் தமிழிசை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.  இதற்கிடையில் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,  தமிழ்நாடு அரசையும், சென்னை காவல்ஆணையர் அருணையும் கடுமையாக விமர்சனம் செய்தது. அதுபோல் கோவையில் தனது வீட்டில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தன்னை சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டமும் நடந்தன. மேலும் தமிழக எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடந்தது. தமிழகம் முழுவதும் யார் அந்த சார் என கேட்டு அதிமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.  இது வைரலானது.

அது போல் தவெக கட்சித் தலைவர் விஜய்யும் தனது பங்கிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தார். அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக விஜய் தம் கைப்பட எழுதிய கடிதத்தை விநியோகித்தனர்.

இந்த நிலையில் பாமகவின் மகளிர் அணி சார்பில் இன்று வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் அடுத்தது  நானா, Am I Next என கேட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்த போராட்டம் பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி தலைமையில் நடக்கிறது.  இந்த போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சென்னையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதால் வள்ளுவர் கோட்டத்தில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

யார் அந்த சார்? எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் போராட்டம் நடத்தியவர்கள்மீது ‘ஆபாசமாக பேசுதல்’ பிரிவில் காவல்துறை வழக்கு பதிவு…