சென்னை: இன்று மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டில் அரசியல் களம் கடந்த சில மாத காலமாகவே பரபரப்பாக காணப்படுகிறது. தற்போதைய நிலையில், ஆளும் கட்சியான தி.மு.க., எதிர்க்கட்சியான அ.தி.மு.க., நடிகர் விஜயின் த.வெ.க., நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது.
இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என நோக்கில் திமுக தலைமையில் வலுவான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைந்துள்ளது. திமுக ஏற்கனவே மாவட்டந்தோறும் மகளிரணி, இளைஞரணி, பாக முகவர்கள் மாநாடு என நடத்தி தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த கூட்டணியில், காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க.. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இதையடுத்து கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் இன்று தொடங்குகிறது.
இநத் நிலையில், இன்று மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று மதுரையில் தென் மண்டல தி.மு.க. தேர்தல் முகவர்கள் மாநாடு நடைபெறுகிறது. மாலை 5 மணியளவில் நடைபெறும் மாநாட்டில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு திமுக முகவர்களுக்க ஆலோசனை வழங்கி பேசுகிறார். இதைத்தொடர்ந்து.
மதுரையில் கமல் பண்பாட்டு மையம் சார்பில் மகாத்மா காந்தியின் நினைவு போற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கமலஹாசன் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சருடன் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் மேடையேற உள்ளனர்.
கூட்டணி கட்சிகளை சேர்ந்த காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ, கம்யூனிஸ்டு தலைவர்கள் சண்முகம், வீரபாண்டியன் ஆகியோர் விழாவில் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் தேமுதிக தலைவர் பிரேமலதாவும் கலந்துகொள்ள வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]