பெங்களுரு: தன்னை பெற்ற வயதான தந்தையை பார்சலில் அனுப்ப ஒரு பெண் முயன்றுள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உளளது. இதுபோன்ற கொடூஞ்செயல் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. இந்த சம்பவம் கார்டன் சிட்டி என போற்றப்படும் பெங்களூரு மாநகரரில் அரங்கேறி உள்ளது.

பெங்களூருவை சேர்ந்த இளம்பெண் மற்றும் சிலர் சேர்ந்து, தனது வயதான தந்தையை மங்களூருவுக்கு பார்சலில் அனுப்ப மூட்டை கட்டி தூக்கி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே தமிழ்படம் ஒன்றில் இதுபோன்ற நகைச்சுவம் சம்பவம் வெளியான நிலையில், அதுபோலவே ஒரு இளம்பெண் தனது தந்தையை உண்மையாகவே பார்சலில் அனுப்ப முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால், அவர்கள், பேருந்து கட்டண உயர்வு கொள்ளையை வெளித்துக்கொண்டு வரவும், அரசுக்கு தெரியப்படுத்தவே இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.
உண்மையிலேயே இது விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையா அல்லது , ரீல்ஸ் மோகமா என்பது காவல்துறையினரின் விசாரணையில்தான் தெரிய வரும்.

மத்திய பெங்களூரின் வ்யாலிகாவல் (Vyalikaval) பகுதியில், தங்களது போராட்டத்தை ‘வைரலாக்கும்’ நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் முயற்சி, மேலும் சிறிது நேரம் அந்த பால்சல் திறக்கபடாதிருந்தால், ஒரு துயரச் சம்பவமாகவே மாறியிருக்கக்கூடும்.
விசாரணையில், பெங்களூருவை சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் முதியவர் உட்பட ஆறு பேர் கொண்ட குழுவினர், விநாயக் சர்க்கிள் பகுதியில் உள்ள ஒரு கொரியர் நிறுவனத்துக்கு ஒரு சாக்கு மூட்டையை கொண்டு வந்து, அதை மங்களூருக்கு அனுப்பும்படி கேட்டுக் கொண்டனர்.
பெரிய சாக்கில் என்ன இருக்கிறது என்று ஏஜென்சி ஊழியர்கள் கேட்டபோது, வீட்டுக்கு தேவையான பொருட்கள் என கூறினர். ஆனால், அதை ஏற்க மறுத்த கொரியர் நிறுவனம், அதை திறந்து காட்ட வலியுறுத்தி உள்ளது. இதையடுத்து, வேறுவழியின்றி, அதை எடுத்துவந்த குழுவில் இருந்த ஒருவர் அதைத் திறந்தார். அப்போது அந்த சாக்குமூட்டைக்குள் முதியவர்ஒருவர்இருந்தது தெரிய வந்தது. இதை கண்டு கொரியர் நிறுவன ஊழியர்கள்அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக அவர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.

ஆனால், அந்த முதியவரை மூட்டை கட்டி எடுத்த வந்தவர்கள், இந்த பார்சலை மங்களூருக்குஅனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், கொரி நிறுவனத்தினர், மனிதர்களை எல்லாம் பார்சலில் அனுப்ப முடியாது என ஊழியர்கள் கூறிவிட்டனர். இதற்கிடையில் சாக்குமூட்டையில் கட்டப்பட்டிருநத வயதானவர் மூச்சு விட சிரமப்பட்டு, மிகவும் சோர்வாக காணப்பட்டதால் ஊழியர்கள் அவர் குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து அந்த கும்பல், இந்த கூரியர் இல்லைன்னா வேறு கூரியர் இல்லையா வாங்க நாம வேற நல்ல கூரியரை கண்டுபிடிப்போம் எனக் கூறி அங்கிருந்து முதியவரை மீண்டும் மூட்டைக்குள் கட்டிஎடுத்து சென்றுள்ளனர். இதை கண்டட அக்கம் பக்கத்து கடைகளில் இருந்தவர்கள் பார்த்து வேதனை அடைந்ததுடன், சிலர் தங்கள் செல்போனில் படம் பிடித்தனர்.

இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து கூரியர் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் ஊழியர்களிடம் என்ன நடந்தது எனக் கேட்டு தெரிந்துக்கொண்டனர். மேலும் அந்தப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த கும்பல் யார் என்பதை தேடிக்கண்டுப்பிடித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
யுகாதி மற்றும் ரம்ஜான் பண்டிகைகளுக்கு முன்பு பேருந்து கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டு உள்ளதால், அதை உலக்கும், மாநில அரசுக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காக இவ்வாறு செய்ததாக ஒரு இளம் பெண் போலீசாரிடம் கூறினார். அதிக கட்டணம் காரணமாக தனது வயதான தந்தை மங்களூருக்கு பயணம் செய்ய முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
இதைகேட்ட போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர். கட்டண கொள்ளையை வெளிச்சத்துக்கு கொண்டுவர பெற்ற தந்தையையே பார்ச்சல் அனுப்ப முயன்ற சம்பவம் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. மேலும், கூரியர் ஏஜென்சியின் உரிமையாளர் அல்லது மேலாளர் இதுகுறித்து முறையான புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
[youtube-feed feed=1]