டெல்லி: கிரிக்கெட் சூதாட்டத்தின் முக்கிய குற்றவாளியான சஞ்சீவ் சாவ்லா 20 ஆண்டுகள் கழித்து இந்தியா அழைத்து வரப்பட்டார்.
2000ம் ஆண்டு இந்தியாவில் கிரிக்கெட் போட்டியின்போது, சூதாட்டத்தில் ஈடுபட்டதாக, அப்போதைய தென் ஆப்பிரிக்க கேப்டனாக இருந்த ஹன்சி குரோனியே மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இது கிரிக்கெட் உலகம் முழுவதுமே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த வழக்கில், பிரிட்டனைச் சேர்ந்த, புரோக்கர் சஞ்சீவ் சாவ்லாவை, நாடு கடத்தி வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி, சாவ்லாவை நாடு கடத்த, ஜனவரி 23ம் தேதி லண்டன் நீதிமன்றம் ஆணையிட்டது.
ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் சாவ்லா தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி அதன்படி, வரும்19ம் தேதி சாவ்லா நாடு கடத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து இந்தியா, இங்கிலாந்து ஒப்பந்தத்தின் படி 20 ஆண்டுகள் கழித்து, விசாரணைக்காக டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார்.
இந்தியாவில் 2000ல் நடந்த கிரிக்கெட் போட்டியின்போது சூதாட்டம் நடந்ததாக தென் ஆப்ரிக்க அணி கேப்டனாக இருந்த ஹன்சி குரோனியே மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த கிரிக்கெட் சூதாட்டத்தின் முக்கிய குற்றவாளியான சஞ்சிவ் சாவ்லா லண்டனுக்கு தப்பிச் சென்றார்.