க்னோ

லகாபாத் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி ராஜேந்திர குமாரை மாடு முட்டியதால் தற்போது அவர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

லக்னோ நகரில் கவனிப்பாரின்றி திரியும் மாடுகளால் மக்கள் கடும் துயரம் அடைகின்றனர். கடந்த மாதம் 23 ஆம் தேதி அன்று ஒரு வியாபாரி மாடு முட்டியதால் நகரின் விருந்தாவன் யோஜனா பகுதியில் மரணம் அடைந்தார். அதை ஒட்டி அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளை லக்னோ நகராட்சியை இந்த வழக்கில் குற்றம் சாட்டி விரைவில் இந்த கால்நடைகள் ஆதரவின்றி அலைவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளையில் நீதிபதியாக பணி புரியும் ராஜேந்திர குமார் என்பவர் கோமதி நகரில் அமைந்துள்ள பெட்வா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அவர் நேற்று முடி திருத்திய பின் தனது ஸ்கூட்டரில் காலை சுமார் 11 மணி அளவில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது தெருவில் இருந்த காளை மாடு ஒன்று அவரை முட்டி உள்ளது. இதனால் ஸ்கூட்டரில் இருந்து விழுந்த அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தோர் உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லக்னோவில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நீதிபதி ராஜேந்திர குமார் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.