பாட்னா:

பீகாரில் பெண்கள் மட்டுமே பணியாற்றும் வகையிலான புதிய தபால் நிலையத்தை  மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தொடங்கி வைத்தார்.

பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள மாநில அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலக வளாகத்தில் முழுவதும் பெண்கள் மட்டுமே பணியாற்றும் “மகிளா தாக் கார்” (Mahila Dak Ghar ) என்ற பிரத்யேக தபால் நிலையம் திறக்கப்பட்டது.

விழாவில் கலந்துகொண்டு தபால் நிலையத்தை திறந்து வைத்து பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்,  இந்த அலுவலகம் முழுவதும் மகளிர் மட்டுமே செயல்படுவர் . தலைமை அதிகாரி முதல் தபால்களை வினியோகம் செய்பவர்கள் வரை மகளிர் மட்டுமே பணியில் ஈடுபடுவர்.

மேலும் மாநிலஅரசு பணி தேர்வாணையத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் இந்த மகளிர் மட்டும் போஸ்ட் ஆபிஸ் உதவி செய்யும் என்றார்.

தொடர்ந்து மாநிலத்தின் முதலாவது ஆதார் கேந்திர மையத்தையும் தொடங்கி வைத்தார். அப்போது பேசியவர்,  இது நாட்டின் 10 வது ஆதார் கேந்திரம் என்றவர்,  நாள் தோறும் இந்த ஆதார் கேந்திர மையம் ஆயிரம் ஆதார் கார்டுகளை வழங்க கூடியவை. விரைவில் இவை 3 ஆயிரம் சதுர அடி அளவிற்கு விரிவாக்கம் செய்யப்படும் என கூறினார்.

இந்தியாவின் முதல் மகளிர் மட்டும் போஸ்ட் ஆபிஸ் டில்லியில் கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் 8ந்தேதி அப்போதைய மத்திய தகவல் தொடர்பு மற்றும் தகவல் துறை அமைச்சர் கபில்சிபலால் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.